×

பட்டிவீரன்பட்டி பகுதியில் மானாவரி பயிர்களின் விளைச்சல் அதிகரிப்பு

பட்டிவீரன்பட்டி, டிச.27: பட்டிவீரன்பட்டி பகுதியில் மானாவரி பயிர்களின் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, நரசிங்கபுரம் மற்றும் தாண்டிக்குடி மலை அடிவாரத்தில் உள்ள கோம்பை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் மானாவரி விவசாயப் பயிர்களான வெள்ளை சோளம், நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நடவு செய்தனர்.

தற்போது இந்த மானாவரிபயிர்கள் வளர்ந்து அறுவடை செய்ய தயாராக உள்ளதால், இதன் அறுவடை தொடங்கியுள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சென்ற ஆண்டை இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இது பற்றி மானாவரி விவசாயி கூறியதாவது: இந்த வருடம் ஆடிமாத துவக்கத்தில் மழை இல்லை. ஆவணி மாதத்தில் தான் மழை பெய்தது. இதனால் தாமதமாகத் தான் விவசாய பணிகளை துவக்கினோம். தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து விட்டதால், இதனை அறுவடை செய்து வருகிறோம்.

பொதுவாக, மானாவரி விவசாயிகள் பெரும்பாலும் சிறிய அளவிலான விவசாய நிலங்களே வைத்துள்ளனர். இதனால் இதனை உள்ளுர் வியாபாரிகளிடம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.  இதனால் அரசு நெல்லை கொள்முதல் செய்வது போல் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து சத்துமிகுந்த சிறு தானியங்களான கம்பு, சோளம் போன்றவற்றை நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்’’ என்றார்.

Tags : Pattiviranapatti ,
× RELATED பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்;...